செய்திகள்

ராஞ்சி பிட்ச் தயாரிப்பில் கவனம் செலுத்தும் தோனி! ரசிகர்கள் பரவசம்!

அணியில் இல்லாதபோதும் அக்கறையுடன் அவர் செயல்படுவது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

எழில்

ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் 16-ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ராஞ்சியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இது. 

இந்நிலையில் ஆடுகளத்தின் தயாரிப்பு குறித்து தோனி அக்கறை காட்டி வருகிறார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. அணியில் இல்லாதபோதும் அக்கறையுடன் அவர் செயல்படுவது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இதுகுறித்து ராஞ்சி பிட்ச் தயாரிப்பாளர் எஸ்பி சிங் கூறும்போது: கடந்த நான்கு வருடங்களாக பிட்ச் தயாரிப்பில் தோனி தலையிட்டதில்லை. மிகச்சிறந்த வீரரான அவரிடம் எப்போதும் ஆலோசனைகள் பெற விரும்புவேன். ராஞ்சியில் இருக்கும்போது எப்போதும் அவர் இங்கு வருவார். உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்வார். இன்று அவர் பிட்ச்சைப் பார்த்தார். அதுகுறித்து இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். இது எனக்குப் புதிதல்ல. ஆடுகளம் - பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு தரப்புக்கும் உகந்ததாக இருக்கும். டெஸ்ட் போட்டி 5 நாள்கள் நீடிக்கும்படி இருக்கும் என்றார்.  

ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் தபசிஸ் கூறும்போது: பிட்ச் சரியாக இருக்கவேண்டும் என்பதில் அவர் அக்கறை செலுத்துகிறார். தோனி சில ஆலோசனைகள் கூறியுள்ளார். தொடர்ந்து பிட்ச் தயாரிப்பாளரிடம் பேசி ஆடுகளம் தயாரிப்பு குறித்து கேட்டுவருகிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT