செய்திகள்

ஃபெடரேஷன் கோப்பை கூடைப்பந்துப் போட்டி

DIN

31-ஆவது ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் கோவையில் மார்ச் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இது குறித்து தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகப் பொறுப்புச் செயலாளர் டி.பார்வேந்தன், ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலன், பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் டி.பழனிச்சாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகம், அரைஸ் அறக்கட்டளை, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம், பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியன இணைந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கும் 31-ஆவது தேசிய கூடைப்பந்துப் போட்டிகளை நடத்த உள்ளன. இப் போட்டிகள் கோவை, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன. ஃபெடரேஷன் கோப்பைக்கான போட்டி 25 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் அணியில் மத்திய மும்பை ரயில்வே அணி, இந்திய விமானப் படை அணி, குஜராத், கேரளம், பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரகண்ட் அணிகளும், பெண்கள் பிரிவில் தெற்கு ரயில்வே அணி, சத்தீஸ்கர், தில்லி, கேரளம், பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்க அணிகளும் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு நாளும் ஆண்கள் பிரிவில் 4 ஆட்டங்கள், பெண்கள் பிரிவில் 4 ஆட்டங்கள் நடைபெறும். இறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT