செய்திகள்

பயிற்சியாளர்களுக்கான புத்துணர்வு முகாம்: சிஏ-பிசிசிஐ இணைந்து நடத்துகிறது

தேசிய கிரிக்கெட் அகாதெமி முயற்சியின் பேரில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் (சிஏ) இணைந்து பிசிசிஐ பயிற்சியாளர்களுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

DIN

தேசிய கிரிக்கெட் அகாதெமி முயற்சியின் பேரில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் (சிஏ) இணைந்து பிசிசிஐ பயிற்சியாளர்களுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து, ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள பிசிசிஐ பயிற்சியாளர்களுக்கான புத்துணர்வு முகாம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இந்த முகாமுக்கான தனது நிபுணர்களை அனுப்பியுள்ளது.
இந்த புத்துணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையில் தேசிய கிரிக்கெட் அகாதெமியில் நடைபெறுகிறது. அப்போது, இரு பிரிவுகளாக பயிற்சியாளர்கள் இந்த முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
முதலில் 25 பெண் பயிற்சியாளர்களும், அவர்களைத் தொடர்ந்து 25 ஆண் பயிற்சியாளர்களும் இதில் பங்கேற்பார்கள். பயிற்சி முறை, அதன் மாற்ற நிலைகள் ஆகியவை குறித்து இம்முகாமில் விளக்கப்படும்.
இந்த முகாமின் மூலமாக புதிய பயிற்சி முறைகளை அறிந்துகொள்வது உள்பட பல்வேறு பலன்களை இந்திய பயிற்சியாளர்கள் பெறுவார்கள் என பிசிசிஐ நம்புகிறது. எதிர்காலத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிசிசிஐ அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

புதிய மைல் கல்

சிலம்பம் மண்ணின் கலாசாரம்...

உறவு

மூலிகை மருத்துவம்...

SCROLL FOR NEXT