செய்திகள்

ஹாமில்டன் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 314-க்கு ஆல் அவுட்

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 89.2 ஓவர்களில் 314 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.
2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் டி காக் 118 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 90, கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 108 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சேர்த்து வெளியேறினர். இறுதியில் அந்த அணி 89.2 ஓவர்களில் 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூஸிலாந்து தரப்பில் மட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
நியூஸிலாந்து-67/0: பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து அணி 25.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக 2-ஆவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. டாம் லதாம் 42, ஜீத் ரவால் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT