செய்திகள்

ஐ.சி.சி டெஸ்ட் தர வரிசை பட்டியல்: இந்தியா மீண்டும் 'நம்பர் ஒன்'!    

IANS

துபாய்: உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியா 123 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தினை பிடித்திருக்கிறது.

உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான புள்ளி பட்டியலானது வருடாந்திர கணக்கீட்டுக்குப் பிறகு இன்று வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் விராத் கோலி தலைமையலான் இந்திய அணி 123 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தினை பிடித்திருக்கிறது. 117 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டாம் இடத்தினை பிடித்திருக்கிறது. ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது 100 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து (99) நான்காமிடத்திலும், நியூசிலாந்து (96) ஐந்தாமிடத்திலும், பாகிஸ்தான் (93) ஆறாமிடத்திலும், இலங்கை (91) ஏழாமிடத்திலும், மேற்கிந்திய தீவுக ள் அணி (75)  எட்டாமிடத்திலும், இறுதியாக வங்கதேசம் (69) ஒன்பதாமிடத்திலும் உள்ளன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT