செய்திகள்

முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்களை எடுத்துள்ள சங்கக்காரா!

எழில்

39 வயது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வும் பெற்றாகிவிட்டது. அடுத்து வீட்டில் ஓய்வு எடுப்பதுதானே பாக்கி.

ஆனால் இலங்கையின் முன்னாள் வீரர் சங்கக்காரா என்ன செய்துள்ளார் தெரியுமா?

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடி வரும் சங்கக்காரா தொடர்ச்சியாக 5 சதங்களை எடுத்து சாதனை செய்துள்ளார். அதிலும் கடந்த 8 நாள்களில் இது மூன்றாவது சதம். 

இந்த கவுண்டி சீசனுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகக் கூறியுள்ள சங்கக்காராவின் இந்தச் சாதனை கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 
தொடர்ச்சியாக சதமெடுத்தவர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளார். சாதாரண சாதனையா இது?

முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சதம் எடுத்தவர்கள்

6 சதங்கள்

சிபி ஃபிரை, டான் பிராட்மேன், மைக் பிராக்டர்

5 சதங்கள்

எவர்டன் வீக்ஸ், பிரெய்ன் லாரா, மைக் ஹஸ்ஸி, பார்தீவ் படேல், குமார் சங்கக்காரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT