செய்திகள்

ரஞ்சி கிரிக்கெட்: ம.பி. 264

தினமணி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 90.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.
 கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் மத்தியப் பிரதேச அணி, முதல்நாள் முடிவில் 80 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆவது நாள் ஆட்டத்தை அங்கித் சர்மா 75, மிஹிர் ஹிர்வானி 16 ரன்களுடன் தொடங்கினர்.
 இதில் ஹிர்வானி 17, அங்கித் சர்மா 77 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக இஷ்வர் பாண்டே 29 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். தமிழகம் தரப்பில் விக்னேஷ் 4, முகமது 3, வாஷிங்டன் சுந்தர் 2, சாய் கிஷோர் ஒரு விக்கெட் எடுத்தனர்.
 தமிழகம்- 191/6: இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய தமிழக அணி, சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 67 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் 94, மகேஷ் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக ஆடிய கேப்டன் அபினவ் 5, இந்திரஜித் 25, வாஷிங்டன் சுந்தர் 9, ரங்கராஜன் 8 ரன்களில் வெளியேறினர். சங்கர், அபராஜித் டக் அவுட் ஆகினர். மத்தியப் பிரதேச தரப்பில் இஷ்வர், புனித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT