முகப்பு
செய்திகள்

பாலிவுட் நடிகையைத் திருமணம் செய்தார் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான்!

30 வயது சகரிகா, ஷாருக் கான் நடித்த புகழ்பெற்ற படமான சக் தே இந்தியாவில் நடித்து கவனம் பெற்றவர்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

பாலிவுட் நடிகை சகரிகா கட்கேவைத் திருமணம் செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரரான ஜாகீர் கான். 

30 வயது சகரிகா, ஷாருக் கான் நடித்த புகழ்பெற்ற படமான சக் தே இந்தியாவில் நடித்து கவனம் பெற்றவர். அந்தப் படத்தில் சகரிகா, இந்திய அணியின் துணை கேப்டனைக் காதல் செய்வதுபோல நடித்திருப்பார். நிஜ வாழ்க்கையிலும் அவர் கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் ஜாகீர் கான் - சகரிகா ஆகிய இருவரும் இன்று காலை பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். 39 வயது ஜாகீர் கானின் ப்ரோஸ்போர்ட் ஃபிட்னஸ் ஸ்டூடியோவின் தலைமை நிர்வாகி அஞ்சனா சர்மா, திருமணப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.