செய்திகள்

இலங்கை பேட்டிங்! விஜய் சங்கருக்குப் பதிலாக ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்தார் கோலி!

காயம் காரணமாக ஷமியும் விலகியதால் நிச்சயம் விஜய் சங்கர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்...

எழில்

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இன்று தொடங்கியுள்ளது. முன்னதாக, கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக பெரும்பாலும் பாதிக்கப்பட்டு டிரா ஆனது. இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் 2-வது போட்டியில் களமிறங்கியுள்ளன. 

டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற ஷிகர் தவன், புவனேஸ்வர் குமார், ஷமி ஆகியோருக்குப் பதிலாக முரளி விஜய், இஷாந்த் சர்மா, ரோஹித் சர்மா ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள். நாகபுரி மைதானத்தின் ஆடுகளம் முதல் இரு நாள்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானதாக இருக்கும் என்று சொல்லப்பட்டதால் தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிலும் காயம் காரணமாக இந்தப் போட்டியிலிருந்து ஷமியும் விலகியதால் அணியில் விஜய் சங்கர் நிச்சயம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மாவை கோலி தேர்வு செய்துள்ளது விமரிசனங்களை வரவழைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப்பூரில் 20 ஆயிரம் அடிகள்... அங்கிதா சர்மா!

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு!

அரசன் தரமாக இருக்கும்: கவின்

SCROLL FOR NEXT