செய்திகள்

2-வது டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம்! விஜய் அரை சதம்!

எழில்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 2-வது நாளின் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.

நாகபுரியில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணாரத்னே, கேப்டன் சண்டிமல் அரைசதம் கடந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 2, புஜாரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று இந்திய அணி ரன்கள் குவித்து இலங்கை அணிக்கு அழுத்தமளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேர்த்தியான பந்துவீச்சால் விஜய்யும் புஜாராவும் ரன்கள் குவிக்கச் சிரமப்பட்டார்கள். மிகவும் நிதானமாக ரன்கள் சேர்த்து இலங்கை அணியின் திட்டங்களைத் தோல்வியடையச் செய்தார்கள். இருவரும் சேர்ந்து 143 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்கள். இதன்பிறகு 112 பந்துகளில் முரளி விஜய் அரை சதமெடுத்தார். 2-ம் நாளின் முதல் பகுதியில் இருவரும் 86 ரன்கள் சேர்த்தார்கள். அதிலும் இன்றைய முதல் 18 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.

2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 56, புஜாரா 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT