செய்திகள்

விராட் கோலி இரட்டைச் சதம்: இந்தியா 610 ரன்கள் குவித்து டிக்ளேர்

Raghavendran

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி 205 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் சண்டிமல் 57 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 4, இஷாந்த் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ராகுல் 7 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், 3-ஆவது வரிசையில் இறங்கிய புஜாராவுடன் ஜோடி சேர்ந்த முரளி விஜய் சிறப்பாக ஆடி சதமடித்து 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 209 ரன்கள் சேர்த்தது.

பின்னர் புஜாராவுடன் இணைந்த கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். மறுமுனையில் நங்கூரமாய் நின்ற புஜாரா 143 ரன்கள் எடுத்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ரஹானே 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் விளாசினார். மொத்தம் 267 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 213 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ரோஹித் ஷர்மாவும் தன் பங்குக்கு சதமடித்து 102 ரன்களுடன் களத்தில் நின்றார். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இலங்கையை விட 405 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இந்நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 2-ஆவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் துவக்க வீரர் சமரவிக்ரமா டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்துள்ளது. திரிமன்னே 9, கருணரத்னே 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட 384 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இப்போட்டியில் இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT