செய்திகள்

குறைந்த டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள்: அஸ்வின் உலக சாதனை!

லில்லீ இச்சாதனையை நிகழ்த்திய நவம்பர் 27 அன்று அஸ்வினும் அவருடைய சாதனையை முறியடித்தது ஆச்சர்யமான நிகழ்வு...

எழில்

இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று அஸ்வின் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். இது, அந்த அணியின் 2-வது இன்னிங்ஸில் அவர் வீழ்த்தும் 4-வது விக்கெட்டாகும் இதையடுத்து டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை எட்டியுள்ளார் அஸ்வின். 

31 வயது அஸ்வின், 54-வது டெஸ்டில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ, 56 டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை அஸ்வின் முறியடித்துள்ளார். லில்லீ இச்சாதனையை நிகழ்த்திய நவம்பர் 27 அன்று அஸ்வினும் அவருடைய சாதனையை முறியடித்தது ஆச்சர்யமான நிகழ்வு.

குறைந்த டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள்

அஸ்வின் - 54 டெஸ்டுகள் 

டென்னிஸ் லில்லீ - 56 டெஸ்டுகள்

முரளிதரன் - 58 டெஸ்டுகள்

ஹேட்லி - 61 டெஸ்டுகள்

டெஸ்டுகளில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் 50 + விக்கெட்டுகள் எடுத்தவர்கள்

ஷேன் வார்னே - 1993, 1994, 1995
முரளிதரன் - 2000, 2001, 2002
அஸ்வின் - 2015, 2016, 2017

ஒரு வருடத்தில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள்: இந்திய வீரர்கள்

3 - அனில் கும்ளே (1999,2004,2006)
3 - ஹர்பஜன் சிங் (2001,02,08)
3 - அஸ்வின் (2015,2016,2017) 

* இன்று, பெராராவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு... லிவிங்ஸ்டன் உள்பட 4 பேர் நீக்கம்!

பல காட்சிகளில் அழுதேன்... சிறையைப் பாராட்டிய ஷங்கர்!

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

பிரைட்ஸ் ஆஃப் இந்தியா பிரசாரத்தை தொடங்கிய மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்!

அமெரிக்காவின் தாக்குதலில் வெனிசுவேலா துறைமுகம் தகர்ப்பு - அதிபர் டிரம்ப் தகவல்!

SCROLL FOR NEXT