செய்திகள்

கோலி சதம், போல்ட் 4 விக்கெட்: நியூஸிலாந்துக்கு 281 ரன்கள் வெற்றி இலக்கு

Raghavendran

இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இது விராட் கோலி விளையாடும் 200-ஆவது ஒருநாள் போட்டியாகும். கடந்த ஆட்டத்தில் விளையாடிய அணியில் இருந்து அஜிங்க்ய ரஹானே, மணீஷ் பாண்டே ஆகியோர் நீக்கப்பட்டு ஷிகர் தவன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரன் குவிக்கத் திணறியது. துவக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா 20, ஷிகர் தவன் 9 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பின்னர் வந்த கேதர் ஜாதவ் 12 ரன்களுடன் பெவிலியன் திரும்ப கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 4 பவுண்டரிகளின் உதவியுடன் 37 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய தோனி 25, ஹர்திக் பாண்டியா 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுமுனையில் நங்கூரமாய் நின்ற விராட் கோலி சதமடித்தார். தனது 200-ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார்.

மொத்தம் 125 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களின் உதவியுடன் 121 ரன்கள் குவித்து 49.2 ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய புவனேஸ்வர் குமார் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 26 ரன்களை விளாசி கடைசி பந்தில் அவுட்டானார்.

இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் ட்ரென்ட் போல்ட் 4, டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT