செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பை: பரிசுத்தொகை அதிகரிப்பு

எழில்

2018 கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை ரூ. 2602 கோடி. அதாவது 400 மில்லியன் டாலர். இது கடந்த உலகக் கோப்பைப் போட்டியின் பரிசுத்தொகையை விடவும் 12 சதவிகிதம் அதிகம்.

கடந்தமுறை பிரேஸிலில் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றபோது ரூ. 2330 கோடி பரிசுத்தொகை (358 மில்லியன் டாலர்) வழங்கப்பட்டது. இதில் கோப்பையை வென்ற ஜெர்மனி அணி, ரூ. 228 கோடி (35 மில்லியன் டாலர்) பரிசுத்தொகையைப் பெற்றது. இரண்டாம் இடம் பிடித்த அர்ஜெண்டினாவுக்கு ரூ. 162 கோடி (25 மில்லியன் டாலர்) கிடைத்தது. நாக் அவுட் போட்டிகளுக்குத் தகுதி பெறாத அணிகளுக்கு ரூ. 52 கோடி (8 மில்லியன் டாலர்) கிடைத்தது. 

2018 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி ரஷ்யாவில் ஜுன் 14 முதல் ஜுலை 15 வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT