முகப்பு
செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வார்னர் சதம்! முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா முன்னிலை!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் சதமெடுத்து முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற உதவியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் சதமெடுத்து முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற உதவியுள்ளார்.

ஆஸ்திரேலியா - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே சிட்டகாங்கில் திங்கள்கிழமை தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 113.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்று ஆட்டநேர முடிவில் 64 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 88, ஹேண்ட்ஸ்காம்ப் 69 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

ஹேண்ட்ஸ்காம்ப் 82 ரன்களில் ரன் அவுட் ஆனார். 209 பந்துகளில் சதமெடுத்த வார்னர், பிறகு 123 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தேநீர் இடைவேளையின்போது 95 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.

5 விக்கெட் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 16 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.