செய்திகள்

கொரிய ஓபன்: அரையிறுதியில் பி.வி. சிந்து!

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்...

எழில்

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஜப்பானின் மினட்சு மிடானியை சிந்து எதிர்கொண்டார். இதில், 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் மிடானியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிந்து ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டார். உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு சிந்து முன்னேறியது இது முதல் முறையாகும். இதில் அவர் தங்கம் வென்றிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT