செய்திகள்

ஒருநாள் அணிக்கு இரு ஆல்ரவுண்டர்கள் தேவை: விராட் கோலி

எழில்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் மோதுகின்றன. ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

நூறு ரன்களை அடிப்பதற்காக நான் விளையாடுவதில்லை. அதனால்தான் அதை நான் அடிக்கடி அடைகிறேன். 98 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தாலும் நான் சதமடிக்காததற்காக வருத்தப்பட மாட்டேன். அணியின் வெற்றியே எனக்கு முக்கியம். 

ஒரு பந்துவீச்சாளர் ரன்கள் அடிக்கமுடியாதபடி எவ்வளவு டாட் பந்துகளையும் வீசலாம். ஆனால் விக்கெட் எடுக்காவிட்டால் அதிகளவில் ரன்கள் கொடுக்க வேண்டியிருக்கும். ஒருநாள் அணிக்கு இரு ஆல்ரவுண்டர்கள் தேவை. அதற்கான தேடுதலில் நாம் உள்ளோம். 

ரஹானே மிடில் ஆர்டரிலும் தொடக்கத்திலும் ஆடியுள்ளார். தற்போது அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இதனால் அவரும் தனது திட்டங்கள் குறித்து தெளிவாக இருக்கலாம். ராகுல் மிகவும் திறமையான வீரர். அவருக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும். அவருக்கான இடம் இதுதான் எனத் தெரிந்துவிட்டால் அணியின் வெற்றிக்கு மிகவும் உதவுவார் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT