செய்திகள்

புரோ கபடி: யு-மும்பாவுக்கு 8-ஆவது வெற்றி

DIN

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 89-ஆவது ஆட்டத்தில் யு-மும்பா அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள யு-மும்பா அணி 44 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் மும்பை அணி தக்கவைத்துக் கொண்டது.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அபாரமாக ஆடியது தபாங் டெல்லி அணி. இதனால் 8-ஆவது நிமிடத்தில் யு-மும்பா அணியை ஆல் அவுட்டாக்கிய டெல்லி அணி, 11-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு இரண்டே நிமிடங்களில் 4 புள்ளிகளைப் பெற்ற யு-மும்பா அணி, 7-12 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.
15-ஆவது நிமிடத்தில் யு-மும்பா ரைடர் காஷிலிங் அடாகே, இரு புள்ளிகளைக் கைப்பற்ற, 10-13 என்ற நிலையில் பின்தங்கியிருந்தது யு-மும்பா. அதற்குப் பதிலடியாக டெல்லி வீரர் ரோஹித் இரு புள்ளிகளைப் பெற்றுத்தர, அந்த அணி 15-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு 18-ஆவது நிமிடத்தில் டெல்லி அணியை ஆல்அவுட்டாக்கிய யு-மும்பா அணி, சரிவிலிருந்தும் மீண்டது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 16-16 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. 28-ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் சமநிலையிலேயே (20-20) இருந்தன. தொடர்ந்து இரு அணிகளும் அபாரமாக ஆட, 35-ஆவது நிமிடம் வரை சமநிலை (25-25) நீடித்தது. 
கடைசி நிமிடத்தில் யு-மும்பா வீரர் ஸ்ரீகாந்த் ஜாதவ் தனது ரைடின் மூலம் ஒரு புள்ளியைக் கைப்பற்ற, அந்த அணியின் காஷிலிங் அடாகே தனது டேக்கிள் மூலம் ஒரு புள்ளியைப் பெற்றுத்தந்தார். இதனால் யு-மும்பா அணி 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது. யு-மும்பா தரப்பில் ஸ்ரீகாந்த் ஜாதவ் 10 புள்ளிகளையும், காஷிலிங் அடாகே 7 புள்ளிகளையும் பெற்றுத் தந்தனர்.
தபாங் டெல்லி அணி 
8-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி 29 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டங்கள்
பெங்களூரு புல்ஸ்-பெங்கால் வாரியர்ஸ்
நேரம்: இரவு 8
தபாங் டெல்லி-புணேரி பால்டான்
நேரம்: இரவு 9
இடம்: தில்லி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT