செய்திகள்

கணவர் மீது பொசசிவ்னெஸ் உண்டு: மனம் திறந்த சானியா மிர்சா!

இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவாரா என்கிற ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா...

எழில்

இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவாரா என்கிற ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைச் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட சானியா மிர்சா, நடிகை நேஹா துபியாவுடனான நோ ஃபில்டர் நேஹா என்கிற நிகழ்ச்சியில் பேசியதாவது:

எனக்கு நானே என்ன காதல் அறிவுரை கூறுவேன் என்று என்னிடம் கேட்கிறீர்கள். நான் இன்னும் கொஞ்சம் பொசசிவென்ஸ் குறைவாக உள்ளவளாக இருக்கலாம். பாதுகாப்பின்மையை நான் உணரவில்லை. ஆனால் பொசசிவ்னெஸாக உள்ளேன். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. எனவே நான் குறைவான பொசசிவ்னெஸுடன் இருக்கவேண்டும் என்றார்.

கணவருக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள் என்கிற கேள்விக்குப் பதில் அளித்த சானியா, அவர் தன் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தவேண்டும். அவர் என்னை விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியும்தான். அதற்காக அதைச் சாதகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர் என்னை விரும்புகிறார் என்பதை நான் அறிவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT