முகப்பு
செய்திகள்

ஐசிசி தரவரிசை: விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த டிவில்லியர்ஸ்

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார் டிவில்லியர்ஸ்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் - இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை வெளியிட்டது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

சமீபத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியின் போது 176 ரன்கள் விளாசியதன் மூலம் ஒருநாள் போட்டிக்கான போட்ஸ்மேன்கள் தரவரிசையில் 3-ஆம் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க முன்னணி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் முதலிடத்துக்கு முன்னேறினார்.

இதன்மூலம் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அதிக நாட்கள் முதலிடத்தில் நீடித்தவர்களின் வரிசையில் (2,124 நாட்கள்) 2-ஆம் இடம் பிடித்தார். முன்னாள் மே.இ.தீவுகளின் அதிரடி ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தான் தற்போது வரை (2,306 நாட்கள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.

Advertisement

தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 3-ஆம் இடத்துக்குச் சரிந்தார். இதுதவிர பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் 2 இடங்கள் முன்னேறி 4-ஆவது இடம் பிடித்தார். தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் 3 இடங்கள் முன்னேறி 5-ஆம் இடத்தை பிடித்தார். 

அதுபோல பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 23 வயதான பாகிஸ்தானின் இளம் நட்சத்திரம் ஹசன் அலி முதலிடம் பிடித்தார். நடப்பு ஆண்டில் மட்டும் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த 5-ஆவது பந்துவீச்சாளர் ஆவார். முன்னதாக, ட்ரென்ட் பௌல்ட், இம்ரான் தாஹீர், காகிஸோ ரபாடா, ஜாஷ் ஹாசில்வுட் ஆகியோர் முதலிடம் பிடித்தார்கள்.

ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் முகமது ஹஃபீஸ் மீண்டும் முதலிடம் பிடித்தார். வங்கதேசத்தின் ஷகிப்-அல்-ஹஸன் 2-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மேலும், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் 9 முறை முதலிடம் பிடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ஹஃபீஸ் நிகழ்த்தினார்.

அணிகளுக்கான தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குதள்ளி தென் ஆப்பிரிக்க அணி முதலிடம் பிடித்தது. இரு அணிகளும் 120 புள்ளிகள் பெற்றிருந்தாலும், சராசரி விகிதத்தில் தென் ஆப்ரிக்கா முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்நிலையில், அடுத்து நடைபெறவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்றால் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும். அதுவே 3-0 என கைப்பற்றினால் மட்டுமே முதலிடத்தை தக்க வைக்கும் வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments