செய்திகள்

இளம் தமிழ் வீராங்கனையைப் பாராட்டிய பிரதமர் மோடி!

இளவேனிலைப் போன்ற விளையாட்டு வீரர்கள், இளம் வீரர்களுக்கு பெரிய ஊக்கமாக இருப்பார்கள்... 

எழில்

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்ப் பெண்ணான இளவேனில் வலரிவன், மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றார். மேலும் தகுதிச்சுற்றின்போது 631.4 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையும் படைத்தார். இறுதிச்சுற்றில் 249.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். குஜராத்தில் வசிக்கும் இளவேனில், அணிகளுக்கான பிரிவில் ஷ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோருடன் இணைந்து 2-ஆவது தங்கத்தையும் கைப்பற்றினார்.

சமீபத்தில் இந்தியாவுக்குத் திரும்பிய இளவேனில் மற்றும் இதர துப்பாக்கிச் சுடுதல் வீரர்களைப் பாராட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இளவேனிலுக்கான பாராட்டு ட்வீட்டில் மோடி கூறியதாவது:

இளவேனிலைப் போன்ற விளையாட்டு வீரர்கள், இளம் வீரர்களுக்கு பெரிய ஊக்கமாக இருப்பார்கள். சமீபத்தில், அவர் குஜராத்துக்குத் திரும்பியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவு!

போலந்து நாட்டிற்காக வரலாறு படைத்த இகா ஸ்வியாடெக்..! 6 முறையும் பாலினி தோல்வி!

NDA எம்.பி.க்கள் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வாழ்த்திய பிரதமர்!

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்! இதன் மதிப்பு ரூ.140 கோடி

காளையின் ஆதிக்கம்: தொடர்ந்து ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

SCROLL FOR NEXT