செய்திகள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs இதர அணிகள்!

எழில்

ஐபிஎல் போட்டியின் மிகச்சிறந்த அணி என்று மதிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற அணிகளுடனான வெற்றி - தோல்வி விகிதம் எந்தளவுக்கு உள்ளது?

தில்லி - 68.8%

தில்லி அணியுடனான வெற்றி விகிதம் இது. இதுவரை விளையாடிய 16 ஆட்டங்களில் 11-ல் வெற்றி கண்டுள்ளது சிஎஸ்கே. ஐபிஎல்-லின் பலவீனமான அணிகளில் ஒன்றான தில்லிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக வெற்றிகளை அடைந்ததில் ஆச்சர்யம் இருக்கமுடியாது.

ஹைதராபாத் - 66.7%

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 66.7% வெற்றியடைந்துள்ளது என்பது ஆச்சர்யமான தகவல். ஐபிஎல் போட்டியில் பலமான அணிகளில் ஒன்று, ஹைதராபாத். அந்த அணிக்கு எதிராக விளையாடிய 6 ஆட்டங்களில் நான்கில் வென்றுள்ளது சிஎஸ்கே அணி. 

ராஜஸ்தான் - 64.7%

ராஜஸ்தான் அணிக்கு எதிராக. 17 ஆட்டங்களில் 11-ல் வெற்றி கண்டுள்ளது சிஎஸ்கே. முதல் வருடம் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தானிடம் இழந்த சிஎஸ்கே அதன்பிறகு அந்த அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடியுள்ளது. 

பெங்களூர் - 63.2%

ஐபிஎல் போட்டியில் சென்னை - பெங்களூர் மோதும் ஆட்டங்கள் எப்போதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடியவை. 19 ஆட்டங்களில் 12-ல் சென்னையும் 7-ல் பெங்களூரும் வெற்றி கண்டுள்ளன. 

கொல்கத்தா - 62.5%

16 ஆட்டங்களில் 10-ல் வெற்றி கண்டுள்ளது சென்னை. ஐபிஎல்-லின் பலமான அணிகளில் ஒன்றான கொல்கத்தாவிடம் நல்ல வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது சென்னை. 

பஞ்சாப் - 58.8%

ஐபிஎல்-லின் பலவீனமான அணிகளில் ஒன்றான பஞ்சாபிடம் சென்னை அந்தளவுக்கு அதிக வெற்றிகளைப் பெற்றதில்லை என்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. 17 ஆட்டங்களில் 10-ல் வெற்றி பெற்றாலும் 7-ல் தோற்றுள்ளது. மும்பைக்கு அடுத்ததாக பெங்களூர், பஞ்சாப் அணிகளிடம் சென்னை தலா 7 முறை தோற்றுள்ளது. 

மும்பை - 45.5%

சென்னையை வீழ்த்தக்கூடிய ஒரே அணியாக உள்ளது மும்பை. 2013, 2015-ம் ஆண்டுகளில் மும்பையிடம் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளது சென்னை. இரு அணிகளும் 22 முறை மோதியுள்ளன. அதில் மும்பை 12 முறையும் சென்னை 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஐம்பது சதவிகிதத்துக்குக் குறைவான வெற்றியை மும்பையிடம் மட்டுமே அடைந்துள்ளது சென்னை. இந்த ஐபிஎல்-லில் என்ன நடக்கப்போகிறது? இரு ஆட்டங்களையும் வென்று மும்பையின் ஆதிக்கத்துக்கு முடிவு கொண்டுவரப் போகிறதா சென்னை?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT