முகப்பு
செய்திகள்

இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர்: ஷாகித் அஃப்ரிடி சர்ச்சை ட்வீட்

அடக்குமுறை ஆட்சியின் கீழ் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். 

Updated On : 3 ஏப்ரல், 2018 at 8:40 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:08 PM

அடக்குமுறை ஆட்சியின் கீழ் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் அபாயகரமான மற்றும் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். சுதந்திரத்துக்கும், சுய சிந்தனை எண்ணத்துக்கும் எதிராக அடக்குமுறை ஆட்சியின் கீழ் சவால் விடப்படுகிறது. இந்த அத்துமீறல் சம்பவங்கள் நடைபெறும் வேளையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் எங்கு இருக்கிறது என்று தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. இந்த கொடூர சம்பவத்தை தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இங்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இதனால் இந்திய ராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்களும் உயிரிழக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பயங்கரவாத அமைப்புகளும் தொடர் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. இதுபோன்ற சூழலில் ஷாகித் அஃப்ரிடி சர்ச்சைக்குரிய இந்த கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

சமீபத்தில் ஸ்விட்சர்லாந்தில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்த நடைபெற்ற காட்சிப் போட்டியன் போது ரசிகர் ஒருவரிடம் இந்திய தேசிய கொடியை உயர்த்திப் பிடித்து புகைப்படம் எடுக்குமாறு ஷாகித் அஃப்ரிடி கூறிய நிலையில், தற்போது இதுபோன்ற கருத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.