செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வரிசையில் ஆட தோனிக்கு வாய்ப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இடம் பெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வரிசையில் ஆட தோனிக்கு வாய்ப்புள்ளது என அதன் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இடம் பெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வரிசையில் ஆட தோனிக்கு வாய்ப்புள்ளது என அதன் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி 6 அல்லது 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்குகிறார். இதற்கிடையே 2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி இடம் பெற்றுள்ளது. தற்போது தொடக்க வரிசையில் தோனியை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் எத்தனையாவது பேட்ஸ்மேனாக இறங்குவார் என்பதை பிளெமிங் தெரிவிக்கவில்லை. மேலும் அணியில் பல்வேறு பன்முகத் திறமை வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மார்க் உட், லுங்கி கிடி, இந்திய வீரர் தாகூர் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்வார்கள். மேலும் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ளதும் அணிக்கு வலிமை தந்துள்ளது. அவர் பந்துவீச்சோடு, சிறப்பாக பேட்டிங்கும் மேற்கொள்வார் என்றார் பிளெமிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ.ஐ. உச்சி மாநாடு 2026 - புகைப்படங்கள்

இந்தியாவுக்கு வாருங்கள்! வங்கதேச புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு மோடி அழைப்பு!

ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி படத்தின் 225-வது நாள்! ரசிகர்களோடு படம் பார்த்த இபிஎஸ்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப். 20 வரை நடைபெறும்! - அப்பாவு

2030க்குள் 33% மின்சாரப் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT