முகப்பு
செய்திகள்

டேவிஸ் கோப்பையின் இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்தியா தோல்வி! மகேஷ் பூபதி கடும் அதிருப்தி!

இதனால் மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:40 PM
பகிர்:

இவை எதிர்பாராத முடிவுகள்.

சீனாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டிகள் இந்திய அணிக்கு அதிர்ச்சி முடிவுகளை அளித்துள்ளன. 

சீனாவின் டியான்ஜின் நகரில் 2 நாள்கள் டேவிஸ் கப் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தார். 

சீனாவின் யிபிங் 7-6, 6-4 என்கிற நேர் செட்களில் ராம்குமாரை வீழ்த்தினார். இதனால் சீனா 1-0 என முன்னிலை பெற்றது. 

அடுத்த ஒற்றையர் ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியடைந்து இந்திய டென்னிஸ் ரசிகர்களை மிகவும் ஏமாற்றியது. ஜீ சாங், 6-4, 6-1 என நேர் செட்களில் இந்தியாவின் சுமித் நாகலைத் தோற்கடித்தார். இதனால் முதல் சுற்று ஒற்றையர் ஆட்டங்களின் முடிவில் சீனா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்தப் போட்டியில் ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியா சார்பாக ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் ஆகிய வீரர்களும் இரட்டையர் பிரிவில் மூத்த வீரர்கள் ரோஹன் போபண்ணா, லியாண்டர் பயஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இரு தோல்விகள் குறித்து இந்திய அணி கேப்டன் மகேஷ் பூபதி கூறியதாவது: அதிர்ச்சிகரமான முடிவுகள். இருவரும் விளையாடிய விதம் அதிருப்தியை அளிக்கிறது. அக்ரோஷமும் இல்லை, போட்டி மனப்பான்மையும் இல்லை என்று தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.