பூணம் யாதவ் அபார பந்துவீச்சு: 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது...
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
நாகபுரியில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி நெருக்கடியை எதிர்கொண்டது. 21-வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் என்கிற நிலைமைக்குச் சென்றது. தொடக்க வீராங்கனை டேமி 37 ரன்கள் எடுத்தார். நடுவரிசை வீராங்கனை வில்சன் 45 ரன்களும் பின்வரிசை வீராங்கனை ஹஸெல் 33 ரன்களும் எடுத்து அணியின் சரிவை ஓரளவு கட்டுப்படுத்தினார்கள்.
இங்கிலாந்து மகளிர் அணி 49.3 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய மகளிர் அணித் தரப்பில் பூணம் யாதவ் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏக்தா, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுளை வீழ்த்தியுள்ளார்கள்.