முகப்பு
செய்திகள்

காமன்வெல்த் 2018:  மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேற்றம்

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அரையிறுதிச் சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.

Updated On : 8 ஏப்ரல், 2018 at 2:44 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:11 PM

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அரையிறுதிச் சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.

21-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வரிசையில் 94 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் தாக்கூர் வெண்கலம் வென்று அசத்தினார். 

மகளிர் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரி கோம் (வயது 35), 48 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் குத்துச்சண்டை பிரிவில் இந்திய அணிக்கு ஒரு பதக்கம் உறுதியானது. இருப்பினும் மேரி கோம் இறுதிப் போட்டியிலும் வென்று தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அதுபோல ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் விகாஸ் கிருஷ்ணன் 75 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மேலும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முஹம்மது அனாஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.