செய்திகள்

சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஐபிஎல் போட்டி ரத்து?

Raghavendran

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி பல்வேறு தரப்பில் இருந்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள நடப்பு சீசனுக்கான முதல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சில அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் மைதானத்துக்குள் சென்று தங்கள் கோரிக்கைகளை கோஷங்களாக முன்வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியை ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் போட்டி கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மைதானத்துக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வரும் 10-ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. 

முன்னதாக, 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 7-ஆம் தேதி) கோலாகலமாகத் தொடங்கியது. மும்பை இந்தியன்ஸுடன் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி த்ரில் வெற்றி பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT