காமன்வெல்த்: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற 15 வயது இந்திய வீரர்!
அனிஷ் பன்வாலா ஹரியானாவைச் சேர்ந்தவர். முன்னாள் வீரர் ஜஸ்பால் ரானா இவருடைய பயிற்சியாளர்...
கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 25 மீ. ரேபிட் ஃபயர் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்றுள்ளார். இதையடுத்து காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அனிஷ் பன்வாலா ஹரியானாவைச் சேர்ந்தவர். முன்னாள் வீரர் ஜஸ்பால் ரானா இவருடைய பயிற்சியாளர்.