செய்திகள்

டேபிள் டென்னிஸ்: தங்கம் வென்றார் இந்தியாவின் மனிகா பத்ரா!

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்...

எழில்

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரின் யு மெங்யுவை நேர் செட்களில் தோற்கடித்து தங்கம் வென்றார். 

இந்திய பெண்கள் அணி சிங்கப்பூர் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. பெண்கள் குழுப் போட்டியில் பலம் வாய்ந்த சிங்கப்பூர் அணியை 3-2 என்ற கணக்கில் வென்று இந்தியா பெண்கள் அணி தங்கம் வென்றிருந்தது.  மேலும் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா-மெளமா தாஸ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. காமன்வெல்த்தில் இந்திய மகளிர் இரட்டையர் வெள்ளிப் பதக்கம் வெல்வது இது முதல் முறையாகும். இதையடுத்து மகளிர் ஒற்றையர் பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்று மகளிர் டேபிள் டென்னிஸில் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

அடுத்ததாக, பாட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி - சிக்கி வெண்கலம் வென்றுள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் மபாஸா - கிரண்யா ஜோடியை 21-19, 21-19 என்ற நேர் செட்களில் தோற்கடித்து வெண்கலம் வென்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகை அம்பிகா நேரில் ஆறுதல்

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்ற கிராம மக்கள் கோரிக்கை

தேள் கடித்து விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடா்கிறது - வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

கரூா் மாவட்ட ஆட்சியா், எஸ்பி-யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: ஹெச். ராஜா

SCROLL FOR NEXT