முகப்பு
செய்திகள்

காமன்வெல்த்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:45 PM
பகிர்:

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 86.47 மீ. தூரம் எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கம் வென்றார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்லும் 21-வது தங்கம் இது. 

முழு கட்டுரையைப் படிக்க →