செய்திகள்

ஐபிஎல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள்

DIN

ஐபிஎல் போட்டித் தொடரின் 11-ஆவது சீசன் 10-ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதின.
இதில் டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்தனர். 
அணியில் ராபின் உத்தப்பா 3, கிறிஸ் லின் 49, நிதிஷ் ரானா 18, சுனில் நரேன் 9, தினேஷ் கார்த்திக் 29, ஆன்ட்ரெ ரஸ்ஸல் 9, சுப்மன் கில் 3, சிவம் மவி 7  ரன்களை எடுத்தனர்.
இதன்மூலம் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இலக்காக  139 ரன்கள்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 முறையும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் 4 முறையும் வென்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT