செய்திகள்

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி வெண்கலம்

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி ஞாயிற்றுக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றது.

Raghavendran

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி ஞாயிற்றுக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வந்தனர்.

இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் 3-ஆம் இடத்துக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் இந்தியாவின் மணிகா பத்ரா, சத்யன் குணசேகரன் ஜோடி இந்தியாவின் அசந்தா ஷரத் கமல், மௌமா தாஸ் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது. 

மணிகா, சத்யன் ஜோடி 11-6, 11-2, 11-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் நடப்பு காமன்வெல்த் போட்டியில் மட்டும் மணிகா பத்ரா 4-ஆவது பதக்கம் வென்றார். மேலும் டெபிள் டென்னிஸ் பிரிவிலும் இந்தியாவுக்கு 7-ஆவது பதக்கம் கிடைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!

தவெக மாநாட்டில் ஒலித்த பாடல்கள்!

தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் பலி!

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா?

கனிவான குணத்தால் மக்களை ஈர்த்த நீதிபதி காலமானார்!

SCROLL FOR NEXT