செய்திகள்

காமன்வெல்த் கேம்ஸில் இந்தியா: வீரர்களுக்கு இணையாகச் சாதித்த வீராங்கனைகள்!

எழில்

கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாம் இடம் பெற்றுள்ளது. 

கடந்த 4-ம் தேதி காமன்வெல்த் போட்டி வண்ணமயமாகத் தொடங்கி 12 நாள்களாக நடைபெற்று வந்தது. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றனர். 26 தங்கம் உள்பட மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன.

கடந்த 2002 மான்செஸ்டர் போட்டிகளில் 30 தங்கம் உள்பட 69 பதக்கங்களையும், 2010 புதுதில்லி போட்டிகளில் 38 தங்கம் உள்பட 101 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. இதே போல் கடந்த 2014 கிளாஸ்கோ போட்டியில் 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலத்துடன் 5-வது இடத்தைப் பெற்றிருந்தது.

இந்தமுறை பளு தூக்குதலில் 9, துப்பாக்கி சுடுதலில் 16, டேபிள் டென்னிஸில் 8, பாட்மிண்டனில் 6, தடகளத்தில் 3, மல்யுத்தத்தில் 12, குத்துச்சண்டையில் 9, ஸ்குவாஷில் 2, பவர்லிப்டிங்கில் 1 என மொத்தம் 66 பதக்கங்களை இந்தியா வென்றது.

பாட்மிண்டனில் ஸ்ரீ காந்த், சிந்து, சாய்னா, குத்துச்சண்டையில் மேரிகோம், விகாஸ், மல்யுத்தத்தில் சுஷில்குமார், வினேஷ் போகட், டேபிள் டென்னிஸில் மனிகா பத்ரா, சரத்கமல், சத்யன், ஸ்குவாஷில் தீபிகா, ஜோஷ்னா, தடகளத்தில் நீரஜ்சோப்ரா, , பளு தூக்குதலில் சதீஷ் சிவலிங்கம், மீராபாய் சானு, துப்பாக்கி சுடுதலில் அனிஷ் பன்வாலா, ஜித்துராய், தேஜஸ்வனி உள்ளிட்டோர் முத்திரை பதித்தனர்.

விளையாட்டு வாரியாக இந்தியா பெற்ற பதக்கங்கள்

பாட்மிண்டன் : 6

2 தங்கம், 
3 வெள்ளி, 
1 வெண்கலம்

குத்துச்சண்டை : 9

3 தங்கம், 
3 வெள்ளி, 
3 வெண்கலம்

தடகளம்: 3

1 தங்கம், 
1 வெள்ளி, 
1 வெண்கலம்

டேபிள் டென்னிஸ்:  8

3 தங்கம், 
2 வெள்ளி, 
3 வெண்கலம்

துப்பாக்கி சுடுதல்: 16

7 தங்கம், 
4 வெள்ளி, 
5 வெண்கலம்

பளுதூக்குதல் : 9

5 தங்கம்,
2 வெள்ளி, 
2 வெண்கலம்

மல்யுத்தம்: 12

5 தங்கம், 
3 வெள்ளி, 
4 வெண்கலம்

ஸ்குவாஷ்: 2

2 வெள்ளி 

மேலும் இந்திய வீரர்களுக்குக் கிட்டத்தட்ட இணையாக சாதித்துள்ளார்கள் இந்திய வீராங்கனைகள். இந்திய அணி வென்ற 26 தங்கங்களில் 13-ஐ ஆண்களும் 12-ஐ பெண்களும் பெற்றுள்ளார்கள். வெள்ளிப் பதக்கங்களில் ஆண்கள் 9 பெற்றார்கள். வீராங்கனைகள் ஒன்று அதிகமாக 10 வெள்ளிப் பதக்கம் பெற்று இந்திய அணிக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.

இந்தியாவின் மொத்த பதக்கங்கள் - 66 (வீரர்கள்: 35, வீராங்கனைகள்: 28, கலப்பு: 3)

தங்கம் - 26 (வீரர்கள்: 13, வீராங்கனைகள்: 12, கலப்பு: 1)
வெள்ளி - 20 (வீரர்கள்: 9, வீராங்கனைகள்: 10, கலப்பு: 1)
வெண்கலம் - 20 (வீரர்கள் 13, வீராங்கனைகள்: 6, கலப்பு: 1)
அதிகப் பதக்கங்கள் - மனிகா பத்ரா - 4 (தங்கம்: 2, வெள்ளி: 1, வெண்கலம்: 1)
அடுத்த காமன்வெல்த் போட்டிகள் வரும் 2022-இல் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT