செய்திகள்

சிறப்பு ரயில் மூலம் புணேவுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பயணம்

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புணேவில் விளையாடும் போட்டியை காண்பதற்காக அதன் ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலம் புணே புறப்பட்டுச் சென்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிஎஸ்கே-நைட் ரைடர்ஸ் இடையே ஆன முதல் போட்டி நடைபெற்றது. எனினும் சேப்பாக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்கள் சிலர் காலணிகளை வீசி எறிந்து பிரச்னை செய்தனர். 
இதற்கிடையே தமிழகத்தில் நிலவி வரும் போராட்டச்சூழல் காரணமாக சிஎஸ்கேவின் உள்ளூர் ஆட்டங்கள் அனைத்தையும் புணேவுக்கு மாற்றப்படுவதாக ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லா தெரிவித்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி வெள்ளிக்கிழமை இரவு நடக்கிறது. 
சென்னை அணிக்கு ஆதரவு தரும் வகையிலும், ஆட்டத்தை காணும் வகையிலும், புணேக்கு 1000 ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலம் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனர். இதற்கு சிஎஸ்கே நிர்வாகமும் ஆதரவு தந்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் சங்க இணைச் செயலாளர் ஏஆர்ஆர்.ஸ்ரீராம் இதுதொடர்பாக கூறியதாவது:
அணி நிர்வாகத்திடம் இதற்கான ஏற்பாடுகள், உதவிகளை செய்யுமாறு கோரிக்கை வைத்தோம். அதன்படி அவர்களும் உதவி புரிந்தனர். தமிழகம் முழுவதும் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து ரசிகர்கள் காலையிலேயே ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றனர். இலவச பாஸ்கள், உணவு போன்றவற்றை சிஎஸ்கே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்றார். 
ஞாயிற்றுக்கிழமை ரசிகர்கள் மீண்டும் சென்னை திரும்புவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT