செய்திகள்

வாகா எல்லையில் வரம்பு மீறிய பாக். கிரிக்கெட் வீரர்: வைரலாகும் விடியோ

வாகா எல்லையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வரம்பு மீறி நடந்துகொண்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Raghavendran

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் ஹசன் அலி, வாகா எல்லையில் நடைபெறும் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிட சனிக்கிழமை சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் எல்லையில் உள்ள பார்வையாளர்கள் இருக்கையில் அமைர்ந்து இதை பார்வையிட்டார்.

அப்போது திடீரென பார்வையாளர்கள் வரிசையில் இருந்து வெளியேறி, பாகிஸ்தான் வீரர்களின் அணிவகுப்பு தளத்துக்குச் சென்றவர், தான் விக்கெட் எடுத்தவுடன் கொண்டாடுவதைப் போன்ற செய்கையை இந்திய வீரர்கள் மற்றும் அங்குள்ள இந்திய பார்வையாளர்களை நோக்கிச் செய்தார். இந்த விடியோ பதிவு தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

வாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் வீரர்கள் மட்டுமே இந்த கொடி அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில், ஹசன் அலி செய்த காரியத்தை பாகிஸ்தான் வீரர்களும் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: போட்டியாளராகும் மற்றொரு திருநங்கை?

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகல்!

டிஜிட்டல் கைது! அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிசீலனை

84 மார்க் போதாது… சிவகுமாருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

அமெரிக்காவுக்கு நிலம் விற்று, காட்டு வழியாக சென்ற 50 இளைஞர்கள்! ஒருவர் செலவிட்டது ரூ.57 லட்சம்

SCROLL FOR NEXT