செய்திகள்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தொடர்ந்து 2-ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து தொடர்ந்து 2-ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

DIN

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து தொடர்ந்து 2-ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை யமாகுச்சியை எதிர்கொண்டார். 

இதில், பி.வி.சிந்து முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால், யமாகுச்சி 2-ஆவது செட்டை நெருக்கடியுடன் எதிர்கொண்டார். அதன் விளைவாக, 2-ஆவது செட்டில் இருவரும் போட்டி போட்டு புள்ளிகளை பெற்று வந்தனர். இறுதியில் பி.வி.சிந்து 24-22 என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்றினார். 

இதன்மூலம், 21-16, 24-22 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பி.வி.சிந்து தொடர்ந்து 2-ஆவது முறையாக உலக பாட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து இதுவரை 2 வெண்கலம் மற்றும் 1 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது, இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அவர் குறைந்தபட்சம் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT