செய்திகள்

இந்திய அணி பேட்டிங்: தவன், உமேஷ் யாதவ் நீக்கம்!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது...

எழில்

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.  

மொத்தம் 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. முதல் ஆட்டத்திலேயே வென்றிருக்க வேண்டிய இந்திய அணி, மோசமான ஆட்டத்தால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

நேற்றைய முழு நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் ஷிகர் தவன், உமேஷ் யாதவுக்குப் பதிலாக புஜாரா, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக வோக்ஸ் தேர்வாகியுள்ளார். இளம் வீரரான போப் இந்த டெஸ்டில் அறிமுகமாகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT