செய்திகள்

40 பந்துகளில் சதம் & ஹாட்ரிக்: அசத்திய ரஸ்ஸல்!

எழில்

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் டி20 ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

டாஸ் வென்ற ஜமைக்கா டல்லவாஸ், டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணியைப் பேட்டிங் செய்யச் சொன்னது. அந்த அணி 20 ஓவர்களில் 223 ரன்களைக் குவித்தது. மன்ரோ 61, மெக்கல்லம் 56 ரன்கள் எடுத்தார்கள். மொத்தம் 14 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. கடைசி ஓவரை வீசிய ரஸ்ஸல், ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார். 

கடினமான இலக்கை எதிர்கொண்ட ஜமைக்கா அணி, ஒருகட்டத்தில் 6.1 ஓவர்களில் 41 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அந்தக் கணத்தில் ஆட்டம் ஒருபக்கமாகவே இருந்தது. ஆனால் அதன்பிறகு களமிறங்கிய ரஸ்ஸல் நிகழ்த்தியது அற்புதம். ரசிகர்களுக்குத் திகட்டாத விருந்து படைத்தார். இத்தனைக்கும் அவர் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்தும் எதிரணி தவறவிட்டது. கிடைத்த வாய்ப்பை அதன்பிறகு நன்குப் பயன்படுத்திக்கொண்டார் ரஸ்ஸல்.

முதல்முறையாக கேப்டனாக இந்த ஆட்டத்தில் களமிறங்கிய ரஸ்ஸல், 22 பந்துகளில் அரை சதமெடுத்தார். 2016-ல், 42 பந்துகளில் ரஸ்ஸல் சதமடித்ததே சிபிஎல் போட்டியின் அதிவேக சதமாக இருந்தது. தன்னுடைய சாதனையை நேற்று முறியடித்தார் ரஸ்ஸல். 17-வது ஓவரில் 40 பந்துகளில் சதமடித்து சாதனை செய்தார். அப்போதும் கூட அவருடைய அணி வெற்றி பெற 21 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டன. 

மேலும், ரஸ்ஸலும் லூயிஸும் 6-வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 6-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்கிற சாதனையைச் செய்தார்கள். இதற்கு முன்பு, இங்கிலாந்து டி20 உள்ளூர் போட்டியில் 6-வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்தச் சாதனையை இருவரும் முறியடித்துள்ளார்கள். கென்னர் லூயிஸ் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கடினமான இலக்கை ஜமைக்கா அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து நம்பமுடியாத வெற்றியை அடைந்தது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT