செய்திகள்

நிதானமாக விளையாடும் இந்திய அணி: அரை சதமெடுத்த கோலி, புஜாரா!

இந்திய அணி 60 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில்...

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில், 3-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 362 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சரிந்தது. ஹார்திக் பாண்டியா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களை மட்டுமே எடுத்தது. முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பிறகு தன்னுடைய 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, 31 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா 33, கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில் நேற்று வேகமாக ரன்கள் எடுத்த இந்திய அணி வீரர்கள் இன்று நிதானப் போக்கைக் கடைப்பிடித்தார்கள். இதனால் ரன்கள் எடுப்பது குறைவாக இருந்தாலும் இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் மீண்டு வரும் வாய்ப்பை முழுவதுமாக இருவரும் முறியடித்தார்கள். நேற்று 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த புஜாராவுக்கு அடுத்த 28 ரன்கள் எடுக்க 129 பந்துகள் தேவைப்பட்டன. இதனால் கடந்த 16 இன்னிங்ஸில் தனது முதல் அரை சதத்தை எடுத்தார் புஜாரா. அவர் 147 பந்துகளிலும் கோலி 82 பந்துகளிலும் அரை சதங்களை எட்டினார்கள்.

3-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 60 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 362 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு 500 ரன்கள் முன்னிலையை அடைந்த பிறகு இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT