செய்திகள்

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்: விதிமீறலில் ஈடுபட்ட பிராட்டுக்கு ஐசிசி அபராதம்

இந்தியாவுடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறி செயல்பட்ட ஸ்டுவர்ட் பிராட்டுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவுடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறி செயல்பட்ட ஸ்டுவர்ட் பிராட்டுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்டை பிராட் போல்டாக்கினார். அப்போது, ஐசிசியின் விதிகளுக்கு புறம்பாக பிராட் ஆக்ரோஷமாக செயல்பட்டார்.  இது ஐசிசியின் விதி 2.1.7 -இன் படி குற்றமாகும். 

இதனால், அவருக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை அபராதமாக விதிக்கு ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், லெவன் 1-இன் படி ஒரு டிமெரிட் புள்ளியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஐசிசியின் போட்டி நடுவர்கள் குழு விதித்த இந்த உத்தரவை பிராட் ஏற்றுக்கொண்டார். 

இந்த போட்டியின் 4-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 1 விக்கெட்டும், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 210 ரன்கள் தேவை என்ற நிலையும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT