செய்திகள்

வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து & சமீர் வர்மா!

எழில்

உலகின் தலைசிறந்த 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலக பாட்மிண்டன் சம்மேளன வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் போட்டி ஆண்டு இறுதியில் நடத்தப்படுகிறது.  சீனாவின் குவாங்ஷுவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் துவக்க ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார். ஜப்பானின் அகேன் யெமகுச்சியை 24-22, 21-15 என்ற நேர் செட்களில் வென்றார். 2-வது ஆட்டத்தில் உலகின் நெ.1 வீராங்கனையான சீன தைபேவைச் சேர்ந்த தாய் ஹு யிங்கை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 14-21, 21-16, 21-18 என்ற செட்களில் வென்றார் சிந்து. 

இந்நிலையில் இன்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் அமெரிக்காவின் பெய்வென்னை எதிர்கொண்டார் சிந்து. முந்தைய ஆட்டத்தில் நெ.1 வீராங்கனையை வென்ற சிந்து, இந்தமுறை பெய்வென்னை 21-9, 21-18 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 35 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்தார் சிந்து. 

யெமகுச்சிக்கு எதிரான ஆட்டத்தில் தாய் ஹு யிங் பாதியில் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து யெமகுச்சியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியன் ரட்சனோக் இண்டனானை எதிர்கொள்கிறார் சிந்து. 

ஆடவர் பிரிவில், இந்திய வீரர் சமீர் வர்மா முதல் ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரர் மொமடோவிடம் தோல்வியுற்றார். நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்தோனேஷிய அதிரடி வீரர் டாமி சுகிர்தோவை 21-16, 21-7 என்ற செட் கணக்கில் வென்றார். இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தாய்லாந்தின் வாங்சரோனை எதிர்கொண்டார் சமீர் வர்மா. இதில், 21-9, 21-18 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் சமீர் வர்மா. அரையிறுதியில் ஷி யுஹியை எதிர்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT