செய்திகள்

2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: கங்குலி நம்பிக்கை

வருகிற 2019 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார். 

Raghavendran

வருகிற 2019 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார். 

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் 2019-ஆம் ஆண்டு மே 30 முதல் ஜூலை 14 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரை பிரபலப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் கோப்பை கொண்டு செல்லப்படுகிறது. 

அவ்வகையில் நவம்பர் 30-ஆம் தேதி உலகக் கோப்பை 8-ஆவது நாடாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. டிசம்பர் 2-ஆம் தேதி மும்பை, டிசம்பர் 8-ஆம் தேதி பெங்களூரு, டிசம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு தற்போது வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கலந்துகொண்டார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கங்குலி பேசியதாவது:

இது மிகச்சிறந்த நிகழ்ச்சியாகும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இதற்கு முன்பும் கலந்துகொண்டுள்ளேன். 2019 உலகக் கோப்பை மிகப்பெரிய தொடராக அமைய வாய்ப்புள்ளது. இந்தத் தொடரில் வெற்றிபெற்று உலகக் கோப்பையை இந்திய அணி நிச்சயம் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT