செய்திகள்

முதல் டெஸ்டிலேயே 76 ரன்கள் எடுத்து அசத்திய மயங்க் அகர்வால்!

எழில்

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

புதிய தொடக்க வீரர்களான விஹாரியும் மயங்க் அகர்வாலும் ஆஸி. பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டார்கள். பந்துவீச்சுக்குச் சாதகமில்லாத ஆடுகளத்தை நன்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்தார்கள். வழக்கமாக இந்திய தொடக்க வீரர்களில் யாராவது ஒருவர் உடனடியாக ஆட்டமிழந்து விடுவார். இதைத்தான் பல வருடங்களாக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த ஜோடி நிதானமாக விளையாடி புதிய அனுபவத்தை இந்திய ரசிகர்களுக்கு அளித்தார்கள். தான் சந்தித்த 25-வது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார் விஹாரி. கடைசியில் 66 பந்துகள் வரை எதிர்கொண்டு 6 ரன்கள் மட்டும் சேர்த்த விஹாரி, கம்மின்ஸின் பவுன்சரில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த புஜரா வழக்கம்போல தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல்நாள் உணவு இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது இந்தியா.

ஆஸி. பந்துவீச்சாளர்களில் கம்மின்ஸ் கூடுதல் விவேகத்துடன் பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இதனால் அவருடைய பந்தை அடிக்க இருவருமே யோசித்தார்கள். 95 பந்துகளில் தனது முதல் டெஸ்டில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் மயங்க் அகர்வால். 44.3 ஓவர்களில் 100 ரன்களைப் பத்திரமாக எட்டியது இந்தியா. லயனின் 13-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அசத்தினார் மயங்க். ஆனால் தேநீர் இடைவேளை நெருங்கும் சமயத்தில் கம்மின்ஸ் பந்துவீச்சில் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள். தேநீர் இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது இந்தியா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT