முகப்பு
செய்திகள்

200 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்திய இந்திய வீராங்கனை!

35 வயதான ஜுலன், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்துள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:12 PM
பகிர்:

ஜுலன் கோஸ்வாமி - இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திரம். சாதனை வீராங்கனை.

35 வயதான ஜுலன், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்துள்ளார். 5-வது ஓவரில் தெ.ஆ. வீராங்கனை லாராவின் விக்கெட்டை வீழ்த்தி சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். 

கடந்த ஆண்டு, ஜுலன் கோஸ்வாமி ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் (181) வீழ்த்தியவர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார். ஆஸ்திரேலியாவின் கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக் 180 விக்கெட்டுகள் வீழ்த்தி கடந்த 10 ஆண்டுகளாக தக்க வைத்திருந்த சாதனையை ஜுலன் முறியடித்தார். அவர் தனது 153-வது போட்டியில் இந்தச் சாதனை விக்கெட்டை வீழ்த்தினார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் மூன்று வீராங்கனைகள் - ஜுலன் கோஸ்வாமி (200), கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக் (180), லிசா ஸ்தலேகர் (146). இதில் கேத்தரின், ஸ்தலேகர் ஆகிய இருவரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். இதனால் ஜுலனின் சாதனையை மற்ற வீராங்கனைகள் முறியடிக்க நீண்ட காலமாகும் என்று அறியப்படுகிறது.  

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த ஜுலன், கடந்த 2002-ஆம் ஆண்டு அணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.