செய்திகள்

100-ஆவது போட்டியில் சதமடித்தார் ஷிகர் தவன்

Raghavendran

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா முதல் 3-0 என முன்னிலையில் உள்ளது. 

4-ஆவது ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் சனிக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.  எனவே இதிலும் வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணியை வீழ்த்தி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 4 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் ஷிகர் தவனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். 83 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 75 ரன்கள் சேர்த்து விராட் கோலி ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.

இருப்பினும் 100-ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் ஷிகர் தவன், சிறப்பாக ஆடி சதமடித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 13-ஆவது சதமாகும்.

100-ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்தவர்கள்:

  • கார்டன் கிரீன்டிஜ் (மேற்கிந்தியத் தீவுகள்)
  • கிறிஸ் கெய்ன்ஸ் (நியூஸிலாந்து)
  • முகமது யூசுப் (பாகிஸ்தான்)
  • கிறிஸ் கெயில் (மேற்கிந்தியத் தீவுகள்)
  • குமார் சங்ககாரா (இலங்கை)
  • மார்கஸ் ட்ரெஸ்காத்திக் (இங்கிலாந்து)
  • ராம்நரேஷ் சர்வான் (மேற்கிந்தியத் தீவுகள்)
  • டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
  • ஷிகர் தவன் (இந்தியா)

ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்ஸில் 13 சதம் அடித்தவர்கள்

  • ஹசிம் ஆம்லா (83 இன்னிங்ஸ்)
  • குயின்டன் டி காக், விராட் கோலி (86 இன்னிங்ஸ்)
  • டேவிட் வார்னர் (91 இன்னிங்ஸ்)
  • ஷிகர் தவன் (99 இன்னிங்ஸ்)
  • ஏபி டி வில்லியர்ஸ் (121 இன்னிங்ஸ்)

இந்நிலையில், அதிக மின்னல் வெளிப்பாடு காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 34.2 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவன் 107 ரன்களுடனும், ஷிகர் தவன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT