செய்திகள்

ஐந்தாவது ஒரு நாள் போட்டி: தவானைச் சீண்டிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு அபராதம்! 

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் துவக்க வீரர் ஷிகர் தவானைச் சீண்டிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

DIN

போர்ட் எலிசபெத்: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் துவக்க வீரர் ஷிகர் தவானைச் சீண்டிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்தியா மற்றும்  தென் ஆப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, போர்ட் எலிசபெத் நகரில் செவ்வாயன்று நடந்தது. பரபரப்பான இந்த போட்டியில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்டதாக, தென் ஆப்ரிக்க வீரர் ககிஸோ ரபாடாவுக்கு ஐ.சி.சி.15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செவ்வாயன்று நடந்த போட்டியில் ககிஸோ ரபாடா வீசிய பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டினைக் கொண்டாடும் வகையில் நடந்து கொண்ட ரபாடாவின் செயல்கள் தவானை வம்பிழுக்கும் வண்ணம் இருந்ததாகத் தெரிகிறது. இது கண்டிப்பாக ஐசிசியின் வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும்.

எனவே தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவுக்கு ஐந்தாவது ஒரு நாள் போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT