செய்திகள்

ஐசிசி தரவரிசை: முதலிடம் பிடித்து 19 வயது ஆப்கானிஸ்தான் வீரர் புதிய சாதனை!

ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் பூம்ரா, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர்...

எழில்

ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் பூம்ரா, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் ஒன்றாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்கள். 

ஜிம்பாப்வே-க்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என ஆப்கானிஸ்தான் வென்றது. இந்தத் தொடரில் 19 வயது வீரர் ரஷித் கான் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பூம்ராவுடன் இணைந்து ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் ரஷித் கான். இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த இளம் வீரர் (19 வயது 152 நாள்கள்) என்கிற சாதனையைப் படைத்துள்ளார். 

இதற்கு முன்பு 21 வயது 13 நாள்களில் பாகிஸ்தானின் சக்லைன் முஸ்டாக் முதலிடம் பிடித்ததே சாதனையாக இருந்தது. அதை ரஷித் கான் முறியடித்துள்ளார். மேலும் ஐசிசி ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரஷித் கான் 4-ம் இடம் பிடித்துள்ளார். 

ஐசிசி தரவரிசை - பந்துவீச்சாளர்கள்

1.. ரஷித் கான், ஜஸ்ப்ரித் பூம்ரா
3. டிரெண்ட் போல்ட்
4. ஹேஸில்வுட்
5. ஹசன் அலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT