செய்திகள்

2-ஆவது டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு 189 ரன்கள் இலக்கு

DIN

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. இந்நிலையில், சென்சுரியனில் 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீசத் தீர்மானித்தது.
இதையடுத்து, இந்திய வீரர்கள் களம் இறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா ஜூனியர் டாலாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி 'டக்' அவுட் ஆனார். இதையடுத்து, ஷிகர் தவன் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தபோது டுமினி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் கோலி வந்த வேகத்தில் கிளாசென்னிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். சுரேஷ் ரெய்னாவுடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார்.
இருவரும் சிறப்பான விளையாடினர். எனினும், 11-ஆவது ஓவரில் பெலுக்வாயோ வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார் ரெய்னா. அப்போது அவர் 24 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார். அணியின் ஸ்கோர் 90-ஆக இருந்தது. 
தோனி-மணீஷ் கூட்டணி: இளம் வீரரான மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த அனுபவம் மிக்க வீரரான விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி. 
இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தங்களது அரை சதத்தைப் பதிவு செய்தனர்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும், தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியில் பும்ராவுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாகுலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு இது முதல் சர்வதேச டி20 போட்டியாகும். 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT