செய்திகள்

மீண்டும் அசத்தல் பேட்டிங்: மயங்க் அகர்வால் புதிய சாதனை!

எழில்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரம் - கர்நாடகம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மகாராஷ்டிரம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக அமையவில்லை. அந்த அணி 44.3 ஓவர்களில் 160 ரன்களுக்குச் சுருண்டது. தொடக்க வீரர் ஸ்ரீகாந்த் முன்தே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். கர்நாடக அணித் தரப்பில் கே. கெளதம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த இலக்கை எளிதான முறையில் எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது கர்நாடகா. 30.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வென்றது. தொடக்க வீரர் மயங்க் வீரர் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி 81 ரன்கள் எடுத்தார். கருண் நாயர் 70, சம்ரத் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்த வருட இந்திய உள்ளூர் கிரிக்கெட் சீசனின் உச்ச நட்சத்திரமாக உள்ளார் கர்நாடக வீரரான மயங்க் அகர்வால். ரஞ்சி போட்டியில் முச்சதம் உள்ளிட்ட 5 சதங்களுடன் 8 ஆட்டங்களில் 1160 ரன்கள் எடுத்தார். எனினும் இந்த வருடம் சையத் முஸ்டாக் அலி டி20 போட்டியில் மட்டும் சற்றே சுமாராக ஆடினார். 9 ஆட்டங்களில் 258 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியிலும் அவர் அசத்தி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 7 ஆட்டங்களில் 3 சதங்கள் மற்றும் 3 அரை சதங்களுடன் 633 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். 2016/17 விஜய் ஹசாரே போட்டியில் தினேஷ் கார்த்திக் 607 ரன்கள் எடுத்தார். அச்சாதனையை மயங்க் அகர்வால் முறியடித்துள்ளார். 

இந்த உள்ளூர் சீசனில் மயங்க் அகர்வால் எடுத்துள்ள ரன்கள்:

13,8,31,0,0,304*,176,23,90,133*,173,134,78,15,3,55,2,10,13,86,6,9,0,77,109,84,28,102,89,140,81.

இந்திய டெஸ்ட் அணியில் அவ்வளவு சுலபமாக ஒரு புதிய பேட்ஸ்மேன் நுழைந்துவிடமுடியாது. ஆனால் டி20 அணியில் தாராளமாக இடமளிக்கலாம். இதனால் அடுத்து இலங்கையில் நடைபெறவுள்ள டி20 முத்தரப்புப் போட்டியில் மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 27 வயது மயங்க் அகர்வாலை ரூ. 1 கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT